search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்தான பள்ளம்"

    • இந்த சாலையில் அதிக அளவில் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. அதிவேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை ஊராட்சி பூஞ்சோலை தெற்கு சின்னகரட்டுப்பட்டி, பெரியகரட்டுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிக அளவில் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன.

    அதிவேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் சிக்கி இரவு நேரத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக பைக்குகளில் செல்பவர்கள் அதிக அளவில் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். டிப்பர் லாரிகளால் சாலை தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது.
    • பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமை ப்பணி நடந்தது. திண்டுக்கல் ராமையன்பட்டி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியின் முன்பாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.மேலும் இந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

    ஆகவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் பள்ளியின் முன்பாக உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் விழுந்து காயம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமம், ஆரணி சாலையில் சிறு பாலத்தில் சேதம் அடைந்து, தார் சாலையின் பக்கத்தில் குழிப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடைந்தனர். இந்நிலையில் வடதண்டலம் இளைஞர்கள் விபத்து ஏற்படாமல் இருக்க சாக்கு பையில் மணலைக் கொட்டி அடுக்கி வைத்துள்ளனர்.

    அந்த வழியில் செல்லும் நெடுஞ்சாலை துறையில் பணி புரியும் அலுவலர்கள் கடந்த 3 மாதமாக அதை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.

    மேலும் அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் வந்தால் சிறுபாலம் உடைந்து விடக் கூடிய அபாயத்தில் உள்ளது. இதனை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று வயாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலை பணியின் போது சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக அந்த இடத்தில் 4 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது.
    • சீரமைப்பு பணி முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்காக சாலை விரிவாக்க பணியின் போது அபிராமி நகர் அருகே உள்ள மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது.

    அந்தப் பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்தது.இதை சீரமைப்பதற்காக அந்த இடத்தில் 4 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது சீரமைப்பு பணி முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

    ஆகவே பள்ளத்தைச் சுற்றி பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளது.இதனால் ரோடு குறுகலாக காணப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், கனரக மற்றும் பஸ்சுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது பேரிக்கார்டில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.
    உடுமலை:

    உடுமலை பஸ் நிலையம்  கீழ்புறம் ஐஸ்வர்யா நகர் செல்லும் வழியில் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. பொதுமக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த வழியே செல்லும் போது பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது மழையில் பள்ளம் பெரிதாகி உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.

    ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் உயிர் பலி ஏற்படும் முன் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×